Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற வாலிபர்…. நகை-பணம் பறித்த 4 திருநங்கைகள் கைது…. போலீஸ் விசாரணை…!!!

கத்தியை காட்டி பணம் மற்றும் நகையை பறித்த 4 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மூலூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு நேற்று அதிகாலை நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கைகளான ராகவி, இனியா, இசைபிரியா, தில்ஷிகா ஆகிய 4 பேரும் செந்தில் குமரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

பின்னர் நான்கு பேரும் செந்தில் குமார் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி, அவரிடம் இருந்த 27 ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகிவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து செந்தில்குமார் கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் நான்கு திருநங்கைகளையும் கைது செய்து அவர்களிடமிருந்த நகை மற்றும் பணத்தை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |