Categories
உலக செய்திகள்

“கழிவறையில் கேட்ட இஷ் இஷ் சத்தம்”…. உள்ளே எட்டி பார்த்த நபர்…. பதறியடித்து ஓடிய நிகழ்வு…!!

தாய்லாந்தில் கருவறையினுள் பாம்பு இருந்ததை கண்டு வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தாய்லாந்தை சேர்ந்தவர் சோம்ச்சை (42 வயது). இவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கழிவறையின் மீது அமர்ந்து உள்ளார். அப்போது கழிவறையில் இருந்து ‘இஷ் இஷ்’ என்று சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அவர் எழுந்து நின்று கழிவறையின் மீது எட்டிப் பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த பாம்பு அவரை முறைத்து பார்த்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் அலறியடித்து கொண்டு கழிவறையை விட்டு வெளியில் ஓடியுள்ளார்.

அதன் பின்னர் பாம்பு பிடிக்கும் நபருக்கு போன் செய்த சோமச்சை நடந்தவற்றை கூறி அவரை அழைத்துள்ளார். இதனையடுத்து அந்த இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர் கழிவறையில் இருந்த பாம்பு கடிக்காமல் இருந்தது தங்களுடைய அதிர்ஷ்டம் தான் என்று சோமச்சையிடம் கூறி விட்டு அங்கு மறைந்திருந்த 8 அடி மலைப்பாம்பை அசால்ட்டாக பிடித்து அதனை வனப்பகுதியில் கொண்டு போய் விட்டுள்ளார். இதனை வீட்டின் உரிமையாளர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |