Categories
உலக செய்திகள்

கழிவறையில் கேட்ட கிளிக் சத்தம்…. சந்தேகமடைந்த பணியாளர்…. கைது செய்த காவல்துறை…!!

அமெரிக்காவின் பல்பொருள் அங்காடிக்கு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்தவர் சார்லஸ் ரூசெல். இவர் அப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் அந்த பல்பொருள் அங்காடிக்கு வந்த ரிகோ மார்லி (22 வயது) என்ற இளைஞர் அங்குள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். இதனிடையே நீண்ட நேரமாகியும் ரிகோ வெளியே வராததால் சார்லஸ் பார்ப்பதற்காக கழிவறையின் அருகே சென்றுள்ளார். அப்போது அவருக்கு கழிவறையின் உள்ளே இருந்து துப்பாக்கியினுள் தோட்டாவை போட்டு லோடு செய்யும் போது கேட்கும் கிளிக் என்ற சத்தம் கேட்டுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த சார்லஸ் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அத்தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த கழிவறையின் முன்பு துப்பாக்கிகள் ஏந்திய நிலையில் ரெடியாக இருந்துள்ளனர். அப்போது கழிவறையிலிருந்து வெளியே வந்த ரிகோ மார்லி போலீசாரை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் அவரை சோதனை செய்து பார்த்ததில் அந்த நபர் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் வைத்திருந்ததும், குண்டு துளைக்காத ஆடைகளை அணிந்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |