மர்மமான முறையில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாளக்குடி அருகே சந்தைவிளை பகுதியில் ஜேசுராஜகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மிக்கேல் ஜெயா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இரவில் உணவருந்தி விட்டு தூங்குவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மிக்கேல் ஜெயா மறுநாள் காலை கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு ஜேசுராஜகுமார் பிணமாக கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மிக்கேல் ஜெயா கதறி அழுதுள்ளார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜேசுராஜகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.