கேரளாவில் இருந்து கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் நெகிழி கழிவுகள் போன்றவற்றை தமிழக எல்லையோர மாவட்டங்களான குமரி மற்றும் தென்காசியில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசு பலமுறை எச்சரித்தும் கேரள மாநில அரசு இதனை நிறுத்தவில்லை.
இந்நிலையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் விதமாக அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் பிஜேபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவில் இருந்து லாரிகளில் கழிவுகள் ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.