கழிவு நீர் கலந்ததால் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுள்ளெறும்பு நால்ரோடு காலனி அருகே கெங்கன்குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கெங்கன்குளத்தில் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் குளத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே ஆலையிலிருந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.