Categories
தேசிய செய்திகள்

தாகத்திற்கு தண்ணீர் குடித்த 6 பேர் பலி…. 50 பேர் கவலைக்கிடம்…. கர்நாடகாவில் பெரும் சோகம்….!!

கர்நாடகாவில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மகரப்பி கிராமத்தில் அசுத்தமான குடிநீரை உட்கொண்டதால் ஆறு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க புதிய குழாய் அமைக்கும் போது பழைய குழாய் சேதமடைந்து கழிவுநீர் குடிநீரில் கலந்துள்ளது. இதை அறியாத பொதுமக்கள் பலரும் அந்த நீரை பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்களை நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |