கழிவுநீர் சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 42 நகராட்சிகள் அமைந்துள்ளது. இந்த நகராட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையம் எருமனந்தாங்கள், காகுப்பம் பகுதிகளில் அமைக்கப்பட்டது. இதைதொடரந்து வி நகர் பகுதியிலும் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அதிகாரிகள் முயற்சி செய்து வந்துள்ளனர். இதற்காக வி மருது நகர் பகுதியில் இருக்கும் ஏரியில் நகராட்சி அலுவலர்கள் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக குழிகளை தோண்டி வந்துள்ளனர்.
இந்த கழிவு நீர் தொட்டிகள் அமைக்கப்படுவதால் அந்த பகுதிகளில் இருக்கும் நிலத்தடி நீர் பெருமளவில் பாதிக்கப்படுவதாக அந்தப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஏரி மீட்பு ஒருங்கிணைப்பாளர் அகிலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏரி மற்றும் நீர்நிலைகளை அரசு ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து சில மாதங்களாக இந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நகராட்சி அலுவலர்கள் ஏரியில் குழி தோண்டும் பணியை மேற்கொண்டனர். எனவே மீண்டும் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடவேண்டும் என தீர்ப்பளித்தனர். இந்த உத்தரவின்படி நகராட்சி அலுவலர்கள் இந்தக் குழிகளை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.