குஜராத் மாநிலத்தில் கஜ்ராத் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் ரசாயன ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு 5 தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். அப்போது இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. விஷவாயு தாக்கி ஐந்து பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் இந்த மரணங்கள் அதிகரித்து கொண்டே செல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories