கழுத்தில் தாலியுடன் இருக்கும் ப்ரீத்தி ஷர்மாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”சித்தி 2”. ராதிகா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தற்போத ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே, வெண்பா கதாபாத்திரத்தில் இந்த சீரியலில் நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் ப்ரீத்தி ஷர்மாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.