அமெரிக்கா நாட்டில் தெற்கு கரோலினா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நான்கு வயது நிரம்பிய நாய் ஒன்று கழுத்தில் அம்பு எய்திய நிலையில் காணப்பட்டது. அந்த நாய்க்குட்டி வலியால் அலறுவதைக் கேட்ட பெண் ஒருவர் விலங்கு சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாயை பரிசோதனை செய்த அவர்கள், உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு நாயை பரிசோதித்த மருத்துவர்கள், நாயின் தமனிகளை அம்பு தாக்கவில்லை என்றும், அம்பினால் நாய்க்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். பின்பு நாயை மயக்கமடைய செய்த மருத்துவர்கள், வெற்றிகரமாக நாயின் கழுத்தில் இருந்த அம்பை அகற்றியுள்ளனர். தற்போது நாய் நலமுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, “நாயின் மீது யாரோ வேண்டுமென்றே அம்பு எய்தது போல் தெரிகிறது. இது மிகவும் மோசமான செயல்” என்று அவர் தெரிவித்துள்ளார்.