மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அண்ணாநகரில் கேபிள் டி.வி ஆபரேட்டரான பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிவேதா என்ற மகளும், சபரி என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நிவேதா தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவேதா விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் சபரியும், நிவேதாவும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது நிவேதா குளியலறைக்கு சென்று கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் நிவேதாவின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த சபரி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிவேதாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து நிவேதாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நிவேதா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.