Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கடையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், தியா என்ற மகளும், பிரகாஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இரவு நேரத்தில் நண்பருடன் வெளியே சென்ற நவீன்குமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இந்நிலையில் கோடாங்கி பட்டி குளத்துக்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நவீன்குமார் சடலமாக கடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நவீன் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் நவீன் குமாரின் நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |