மர்ம நபர்கள் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள துட்டம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மாதேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னம்மாள் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள பம்பு செட்டில் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 14 பவுன் தங்க நகைகளை காணவில்லை.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.