Categories
தேசிய செய்திகள்

கழுத்தை நெரித்த கடன்தொல்லை…. “3 குழந்தைகளுடன் கனவின் மனைவி எடுத்த விபரீத முடிவு”… சோக சம்பவம்..!!

பீகார் மாநிலத்தில் குடும்ப வறுமையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் ராகோபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மிஸ்ரிலால்.  இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவது அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் மிஸ்ரிலால் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மிஸ்ரிலால், தங்களின் பாரம்பரிய நிலத்தை விற்று இரண்டு வருடங்களாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. பின்னர் கிடைக்கும் நிலக்கரி விற்று வாழ்வாதாரத்தை சமாளித்து வந்ததாகவும், தற்போது கடன் தொல்லை அதிகமான காரணத்தால் வேறு வழியின்றி தற்கொலை செய்து இருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |