Categories
உலக செய்திகள்

“கழுத்தை நெறிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு” 300 கோடி மக்கள் பாதிப்பு…. ஐநா எச்சரிக்கை…!!

உலகளவில் 300 கோடி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் விவசாயப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களில் 320 கோடி பேர் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும் அவர்களின் 120 பேர் மிகவும் மோசமான அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும் ஐநா அறிக்கை எச்சரித்துள்ளது. ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சார்பில் உலக அளவில் உணவு மற்றும் விவசாய நிலை குறித்தும், தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டபோது, கடந்த இருபது வருடங்களுக்கும் மேலான காலத்தில் ஒவ்வொரு நபருக்கும் எவ்வளவு நீர் கிடைத்தது என்பது குறித்து இந்த ஆய்வு கூறியுள்ளது.

மேலும் உலக அளவில் சுமார் 150 கோடி மக்கள் மிகவும் மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் தண்ணீரை சரியாக சேமிக்காததாலும், பிரச்சினையை சரியாக கையாளாதாலும் உலகளவில் பல நூறு கோடி மக்கள் பசியையும் உணவு பற்றாக்குறையையும் சந்தித்துள்ளதாக இந்த ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகில் உள்ள ஒட்டுமொத்த விளைநிலங்களில் 10 விழுக்காட்டுக்கும் மேலான நிலங்கள் வறட்சியை சந்திக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர் குறைவாக தேவைப்படும் உணவு பொருட்களை விளைவிக்குமாறு இந்த அறிக்கை கூறுகிறது. உதாரணமாக காய்கறிகள், விதைகள் கோழியிறைச்சி, பால் பொருட்கள் ஆகியவற்றிற்கு குறைந்த அளவு தண்ணீரை தேவைப்படுவதாக ஆய்வின் அறிக்கை கூறியுள்ளது.

Categories

Tech |