கவசம்பட்டு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் அடுந்திருக்கும் கவசம்பட்டு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா தலைமை தாங்க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தார்கள்.
மேலும் சுகாதார ஆய்வாளர் செழியன் வரவேற்க வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய், கண் பார்வை, கர்ப்பிணிகளுக்கான சிறப்பு பரிசோதனை, ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டது. இதில் 845 நோயாளிகள் வந்து பயன் பெற்றார்கள்.