Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவனகுறைவு தான் காரணமா….?? சிகிச்சை பலனின்றி இறந்த 12-ஆம் வகுப்பு மாணவன்…. தாயின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

மகனின் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் தாய் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் மின்னல் கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிகிருஷ்ணன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஹரிகிருஷ்ணனை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தனது மகனின் இறப்பிற்கு டாக்டர்களின் கவனக்குறைவு தான் காரணம் எனக் கூறி மின்னல் கொடி உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது, எனது மகனுக்கு சிறுகுடலில் ஓட்டை இருப்பதாக கூறி கடந்த 27-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்தனர். அது தோல்வியடைந்ததை அடுத்து கடந்த 5-ஆம் தேதி மீண்டும் 2-வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் எனது மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் தவறான சிகிச்சை மற்றும் கவன குறைவினால் தான் எனது மகன் இறந்துவிட்டான். எனவே நியாயம் கிடைக்கும் வரை மகனின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டேன் என மின்னல்கொடி கூறியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |