Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கவனக்குறைவால் நடந்த தவறு” கவாஸ்கரின் பிறந்தநாள் பரிசாக மீண்டும் கொடுக்கிறோம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்..!!

கவாஸ்கரின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஐசிசி நிறுவனம் மும்பை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவருக்கென்று இரண்டு இருக்கைகள் தனியாக ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், மற்றும் முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கியவர் சுனில் கவாஸ்கர். இவருக்கு நேற்று 71-வது  பிறந்தநாள். இதை பாராட்டும் விதமாக கவாஸ்கருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), நிறுவனம், இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்துகள்  தெரிவிக்கப்பட்டது. ஐ.சி.சி. தனது வாழ்த்து செய்தியில் இவ்வாறு தெரிவித்திருந்தது, “டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் இவர் மேலும் இரண்டு இன்னிங்சிலும் மூன்று முறை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேனகவும், 2005-ம் ஆண்டு வரை நடந்த டெஸ்ட் போட்டிகளிலும்  அதிக சதம் அடித்த சாதனையாளர் என்ற கெளரவம் இவரையே சேரும்.

அதுமட்டுமில்லாமல் நூறு கேட்ச்கள் செய்த முதல் இந்திய பீல்டரும் இவரே ” என்று கவாஸ்கரை புகழ்ந்து பேசியிருந்தது. 1987-ம் ஆண்டில் கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற போது அவரும், அவரது மனைவியும்அமர நிரந்தரமாக இரு இருக்கைகள் மும்பை வான்கடே மைதானத்தில்  ஒதுக்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் கொடுத்த  பங்களிப்பை கௌரவப்படுத்தும் வகையில் இந்த இருக்கைகள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டது.

ஆனால் 2011-ம் ஆண்டின் உலக கோப்பை போட்டிக்காக மும்பை வான்கடே ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்ட பின்பு இந்த இருக்கை வசதிகள் அவருக்கு வழங்கப்படவில்லை. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் செய்த கவனக்குறைவின் காரணமாக நடந்த இந்த தவறை உணர்ந்து தற்போது மும்பை கிரிக்கெட் சங்கம் கவாஸ்கருக்கு மீண்டும் இரு இருக்கைகள் வழங்கப்படும் என்றும், அவ்விரு இருக்கைகளும் மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சார்பில்  ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்த கவாஸ்கர் ‘எனது பிறந்த நாளையொட்டி மும்பை கிரிக்கெட் சங்கம் இனிமையான பரிசை எனக்கு வழங்கியுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |