Categories
தேசிய செய்திகள்

“கவனமாக இருங்கள்” பிச்சை எடுப்பதுபோல் நடித்த…. வடமாநில பெண்களின் துணிகர செயல்…!!

வடமாநில பெண்கள் இருவர் பிச்சை எடுப்பதுபோல் நடித்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள திருப்பதியில் லீலா மஹால் சந்திப்பில் எப்பொழுதும் மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். இங்குள்ள ஒரு ஸ்டீல் மற்றும் சிமெண்ட் கடையில் நுழைந்த இரண்டு வடநாட்டு பெண்கள் கையில் ஆளுக்கொரு கைக்குழந்தைகளுடன், கூடவே ஒரு சிறுமியையும் கூட்டிக்கொண்டு பிச்சை கேட்டுள்ளனர். அவர்களுக்கு கடை உரிமையாளர் தனது செல்போனை பார்த்தபடியே காசு கொடுத்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண்கள் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த இரண்டு பெண்களும் கடை உரிமையாளரை சுற்றி நின்று கொண்டபோது பக்கத்திலிருந்து சிறுமி கல்லாவில் இருந்த ரூ.2.50 லட்சத்தை கொள்ளை அடித்துள்ளார். பின்னர் அனைவரும் கடையிலிருந்து வெளியே சென்றுள்ளனர்.

இதை கடை உரிமையாளர் கவனிக்காததால் மாலையில் கல்லா பெட்டிடை திறந்து பார்த்தபோது பணம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது பிச்சை எடுக்க வந்த பெண்கள் பணத்தை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் கொள்ளையடித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |