தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,முதல்வரின் சந்திப்பு திருப்தியாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி சம்பந்தமாக மட்டும் தான் நாங்கள் பேசியிருந்தோம். அதிகாரிகளுடன் ஆலோசித்து சொல்வதாக தெரிவித்திருந்தார்கள்.
தமிழகம் முழுவதுமே கோவில்கள் திறந்துள்ளன. கோவில் வாசலில் வைத்து… வீடுகளில் வைத்து… வினாயகரை மக்கள் எல்லோருமே வழிபடுவோம். அரசாங்கம் என்னென்ன விதிமுறைகள் சொல்கிறதோ, அதற்கு உட்பட்டு விழா நடத்த வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. பொதுமக்களின் கருத்தை அரசிடம் நான் சொல்லியிருந்தோம்.