Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவனிக்க ஆளில்ல…. என்னாலையும் முடியல….. குற்றவுணர்ச்சியில் மகன் செய்த காரியம்….. சென்னை அருகே சோகம்….!!

சென்னையில் 80 வயது தாயை கவனிக்க முடியாததால் தாயைக் கொன்று விட்டு மகனும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் சின்னமலை வெங்கடாபுரம் என்ற பகுதியில் 53 வயதுடைய ஆரோக்கிய ராஜ் என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழில் செய்து வரும் அவரின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதனால் ஆரோக்கியராஜ் திருமணம் செய்து கொள்ளாமல் 80 வயது மதிக்கத்தக்க தனது தாய் மேரி உடன் வசித்து வந்துள்ளார். அவரின் தங்கை மும்பையில் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரோக்கியராஜ் தாய், வீட்டின் மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து நடக்க முடியாம ல் வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்துள்ளார். வேலைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பி தனது தாயை கவனிப்பதில் ஆரோக்கியராஜ் மிகுந்த சிரமப்பட்டு உள்ளார்.

அவரால் தாயை கவனிக்க முடியவில்லை என்றும், தாயை கவனிப்பதற்கு வேறு ஆட்கள் யாருமில்லை என்றும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரை அக்கம் பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை. அப்போது நேற்று மாலை அவரின் வீட்டிலிருந்து ஒரு துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருப்பதை கண்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர்.

அப்போது அங்கு தாய் மற்றும் மகன் இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இறந்து இரண்டு நாட்கள் ஆகியதால், அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன. அதன்பிறகு போலீசார் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தனது வயதான தாயை கவனிக்க முடியாமல் ஆரோக்கிய ராஜ், தனது தாயை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |