Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கவனிக்க ஆள் இல்லை” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தல் இந்திரா நகரில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த பெண் இறந்துவிட்டார். இந்நிலையில் மாணிக்கம் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன்னை கவனிக்க யாரும் இல்லாததால் மன உளைச்சலில் மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |