சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை நட்டுவது தொடர்பான பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் – காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. தமிழக காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இன்று தமிழக முதல்வரை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இது சம்மந்தமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், மாலை 6.30 மணியளவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். சேலம் – மோரூர் வன்முறை குறித்து விசிக மற்றும் தலி்த் மக்களுக்கு எதிராக நடந்தவற்றை விளக்கினோம். மிகுந்த கவனத்தோடு கேட்டுக் கொண்டார். பின்னர் இது குறித்துப் பரிசீலிப்பதாகக் கூறினார். முதல்வருக்கு நன்றி.
மாலை 6.30 மணியளவில் தமிழக முதல்வர் @mkstalin அவர்களைச் சந்தித்துப் பேசினோம். சேலம் – மோரூர் வன்முறை குறித்து விசிக மற்றும் தலி்த் மக்களுக்கு எதிராக நடந்தவற்றை விளக்கினோம். மிகுந்த கவனத்தோடு கேட்டுக் கொண்டார். பின்னர் இது குறித்துப் பரிசீலிப்பதாகக் கூறினார். முதல்வருக்கு நன்றி. pic.twitter.com/kDyvQ9ST4z
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 1, 2021