லட்சத்தீவு கடல் பகுதியில் இருந்து எம்.வி.கவராத்தி கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு கவராத்தி தீவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் கப்பலில் இருந்த 624 பயணிகள் மற்றும் 85 மாலுமிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
அதன்பிறகு கடலோர காவல்படையின் சமர்த் கப்பல் மும்பையில் இருந்து அனுப்பப்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பலின் இன்ஜின் தீயால் சேதமடைந்ததால் கப்பல் இயக்க முடியாமல் இருந்தது. இதனால் சம்பத் கப்பல் மூலம் இழுத்து துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.