நடிகை சன்னிலியோன் தமிழில் வட கறி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இப்போது வீரமாதேவி, ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி நடனமாட சன்னிலியோன் புது நிபந்தனை விதித்து இருக்கிறார். ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய திரைப்படங்களை எடுத்து பிரபலமான டி.எம்.ஜெயமுருகன் எப்போது தீ இவன் என்ற படத்தை டிரைக்டு செய்து வருகிறார்.
இவற்றில் கார்த்தி, சுகன்யா, ராதாரவி, சுமன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் கவர்ச்சி நடனமாட சன்னிலியோனை அணுகியபோது கதையை கேட்டு உடனடியாக ஆட சம்மதித்து உள்ளார். மேலும் பாடல் காட்சி படப்பிடிப்பில் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது, கொரோனா நோய் தடுப்பு மருத்துவ முறைகள் பின்பற்ற வேண்டும், என்னுடன் ஆடுபவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றெல்லாம் சன்னிலியோன் பல நிபந்தனைகள் விதித்தாராம்.
அதை படக் குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கிடையில் சன்னிலியோன் கூறியதாவது, தமிழ் திரைப்படங்களில் நடிக்கவும், நடனமாடவும் எனக்கு எப்போதுமே விருப்பமுண்டு. ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடிக்கிறேன். அத்துடன் தீ இவன் திரைப்படத்தில் ஆடுகிறேன் என்று கூறினார்..