தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். தற்போது திரைப்படங்களில் நடிப்பது, சுற்றுலா செல்வது என்று ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த காத்து வாக்குல இரண்டு காதல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமீப காலமாக சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் நடித்த சமந்தா அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் வியப்பில் உள்ளனர். திரை பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.