செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்தை நான் கூறுகின்றேன். நம்முடைய மாநில ஆளுநரை பொருத்தவரை உங்களுக்கு தெரியும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அடுத்த நாள் பட்டமளிப்பு விழா இருக்கிறது. அதற்காக ஆயிரம் பேருக்கு மேற்பட்ட மாணவர்கள் அங்கு இருக்கிறார்கள். நம்முடைய அரசினுடைய முக்கியமான அமைச்சர்களும் கூட இருக்கிறார்கள். அதனால் கவர்னர் அவர்களுடைய முடிவு என்னைப் பொருத்தவரை இதில் தவறு எதுவும் கிடையாது.
அதே பாரதிதாசன் கல்லூரி வளாகத்தில் நம்முடைய முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களுடைய புகைப்படம், இறந்துபோன மற்ற 12 அதிகாரிகள் உடைய புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அவரை பொறுத்தவரை ஏற்கனவே இவரது முக்கியமான ஒரு நிகழ்வு. அதற்கு போகவில்லை என்றால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும். அதனால் கவர்னரை பொருத்தவரை அப்படித்தான் முடிவு எடுத்திருக்க கூடும். ஏனென்றால் கவர்னர் சார்பாக என்னால் பேச முடியாது.
அதே நேரத்தில் உங்களுக்கு தெரியும் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள், அதே போல அவர் கூட இருந்த அதிகாரிகளும் குறிப்பாக அவருடைய மனைவியார்…. தமிழகத்தில் இருந்து தமிழக மக்கள், பாரதிய ஜனதா கட்சி கொடுத்த அந்த மிகப்பெரிய ஒரு எழுச்சி மிகு…. நீங்கள் பார்த்து இருப்பீர்கள் போகும்பொழுது சாதாரண மக்களில் இருந்து கட்சி நண்பர்கள் இலிருந்து சாலைக்கு வந்து பிரியாவிடை கொடுத்து இருக்கிறார்கள். அது எப்பொழுதும் கூட யாரும் மறுக்க முடியாது.
அதனால் இதை அரசியலாக்குவது என்னைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அரசியல் பேசுவதற்கு. உண்மை பேசுவதற்கு.. அதைவிட்டுவிட்டு தேவையில்லாமல் கவர்னர் அவர்களை வம்பு சண்டைக்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கவர்னர் அவர்கள் மாளிகையில் இருக்கிறார். எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார் என்றால் ஏதோ குற்றம் சுமத்தலாம். அரசு விழாவில், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். அங்கே வந்து உரிய மரியாதையை கவர்னர் கொடுத்திருக்கின்றார்கள் இதை தவிர வேறென்ன நாம் அவரிடம் கேள்வி கேட்க முடியும் என தெரிவித்தார்.