செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, பொதுவாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர் கவர்னர். கவர்னரிடம் போய் அரசியலில் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியல ? கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதுதான் எங்களுடைய கருத்து, அனைவரின் கருத்தும் அதுதான்.ரஜினிகாந்த் வாரேன், வாரேன் என்று அவர் புதுசா சொல்லல இந்த கருத்தை…
30 வருஷமா இன்னைக்கு வாரேன், நாளைக்கு வாரேன் அப்படின்னு சொல்லுவாரு. பிறகு அவர் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி, கூட்டி ஆலோசனை செய்வார். பிறகு அவர்கள் ரசிகர்கள் எதிர்பார்ப்போட போவார்கள். பின்னர் அரசியலுக்கு வரவில்லை என்பார். இதற்க்கு புதிதாக தான் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
30 வருடமாக பார்த்து, பழக்கப்பட்ட ஒன்று. இந்த பொது தேர்தலில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் தான் கூட்டணி அமையும். எங்களோடு கூட்டணிக்கு வருகின்றவர்கள் எங்களுடைய தலைமையை ஏற்று வருகின்றவர்களை கூட்டணியில் சேர்ப்போம் என தெரிவித்தார்.