ஆளுநர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஜனாதிபதிக்கு அதிமுக புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. இந்த புகார் மனு தமிழக கவர்னர் ஆர் என் ரவி சமீபத்தில் மயிலாடுதுறைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பு குறைவாக இருந்ததாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆகியவற்றால் திமுக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் முருகவேல் என்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
இந்த புகார் மனுவானது மின்னஞ்சல், தபால் பதிவு மூலமாக இந்திய ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சகம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் திமுக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புகார் மனு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.