கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவி வகிக்க தயார் என்று மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இன்னும் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அடுத்த வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவி வகித்த தயார் என்று மெட்ரோ மேன் ஸ்ரீதரன் (88) அறிவித்துள்ளார். இவர் தற்போது பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். “கேரளாவில், பாஜகவை நோக்கி ஏராளமானோர் சாரைசாரையாக படையெடுக்கின்றனர். கவர்னர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதால், அதில் எனக்கு ஒருபோதும் விருப்பமில்லை. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வாய்ப்பளித்தால் களம் இறங்குவேன்” என்று அவர் கூறியுள்ளார்.