மத்தியபிரதேச மாநில கவர்னர் மங்குபாய் படேலுக்கு 3 நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. காய்ச்சல், இருமல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டார். அதையடுத்து அவர் போபால் நகரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆக்சிஜன் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கவர்னரின் பணிகள் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories