நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களின் பெட்ரோல் டீசல் விலை சதம் அடித்து விட்டது. ஏற்கனவே கொரோனா நெருக்கடியான காலத்தில் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்ற நிலையில் பெட்ரோல் விலை உயர்வு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த சூழலில் பெட்ரோல்- டீசல் எப்பொழுது விலை குறையும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
விலையை குறைக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர். இதற்கு மத்தியில் குறைந்த விலையில் பெட்ரோல்-டீசல் பெற்றுக் கொள்வதற்கு வழி ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் எரிபொருள் கார்டுகளை பயன்படுத்தி நாம் பெட்ரோல் டீசல் வாங்கும்பொழுது பணத்தை மிச்சப்படுத்தலாம். Indian Oil HDFC Bank card, Indian Oil Axis Bank card, BPCL SBI Card Octane, Indian Oil Citi, ICICI Bank HPCL Premium உள்ளிட்ட கார்டுகள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்த எரிபொருள் கார்டுகளை பயன்படுத்தி நாம் தொடர்ந்து பெட்ரோல் டீசல் வாங்கும் பொழுது நமக்கு அதிகமான புள்ளிகள் வழங்கப்படும். இந்த புள்ளிகளை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் நிரப்பிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த கார்டுகளின் மூலமாக எரிபொருள் வாங்கும்போது கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.