Categories
அரசியல் மாநில செய்திகள்

கவலைப்படாதீங்க…! நான் பார்த்துக்கொள்கிறேன்…. ஒரு இன்ச் கூட குறைய கூடாது …!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து நேற்று திமுக நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், கடந்த 6 மாதமாக கொரோனா எனும் கொடிய நோயின் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் நாம் சும்மா இல்லாமல் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை ஆரம்பித்து லட்சக்கணக்கான மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளோம். நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகளை தயார் செய்து கொடுத்துள்ளோம்.

மருந்து மாத்திரைகளை வழங்கியுள்ளோம். நிதி உதவி செய்துள்ள அந்த பணிகளை எல்லாம் நிச்சயமாக நான் மறக்கவில்லை. ஊழியரை பணி அமர்த்தி பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.  அப்படி பணி செய்த நீங்கள் நிச்சயமாக இதையும் வெற்றிகரமாக நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது. ஆகவே இந்த பணியை சிறப்பாக நடத்தித் தர வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன். எனவே விடியலை நோக்கிய ஸ்டாலின் குரல் என்ற பரப்புரையை 20க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.

அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு தான் கிடைக்கின்றது. தமிழகத்தை மீட்போம் என்னும் காணொளிக்காட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கின்றது. மாவட்ட மாநாடு நடத்துவது போன்ற அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு பிரச்சாரம் போய்க்கொண்டிருக்கிறது ஜனவரி முதல் வாரத்தில் இருந்து எனது பிரச்சாரத்தை நான் துவங்க உள்ளேன். தேர்தல் முன்பாகவே வரலாம் என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அதற்கு முன்கூட்டியே நான் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது நாம் தயாராக இருக்கிறோம். யாரோடு கூட்டணி யாருக்கு எத்தனை தொகுதி என்னென்ன தொகுதி யார் நம்முடைய வேட்பாளர்கள் இதையெல்லாம் நீங்கள் மறந்து விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதைப்பற்றி நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். வெற்றி பெறக்கூடியவர்கள் தான் வேட்பாளர்கள் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வெற்றிக்கான சூத்திரங்களை மட்டும் நீங்கள் பயன்படுத்துங்கள்.

எந்த வாக்கு பெட்டியை திறந்தால் அதில் உதயசூரியன் தான் உதிக்க வேண்டும். அப்படி ஒரு நிலையை நிச்சயமாக நீங்கள் உருவாக்கி தருவீர்கள். ஆகவே அதிமுகவை நிராகரிப்போம். திமுக ஆட்சியில் அமர வைப்போம் என்று நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய இலக்கு 200க்கும் மேல் தான் என்று. அதாவது விஷன் 2000 என்று கூறுவார்கள். நாம் மிஷன் 200 இந்த இலக்கை நோக்கி சென்றாக வேண்டும். 200க்கு ஒரு இன்ச் கூட குறையக்கூடாது. இன்று முதல் ஒவ்வொரு 24 மணி நேரமும் உழைத்தால் தான் 200 என்பது சாத்தியம்.

நம்மால் முடியும், நம்மால் மட்டும் தான் முடியும். நம்முடைய மாவட்ட செயலாளர்கள், மாநகரத்தின் செயலாளர்கள், நகர கழகத்தின் செயலாளர்கள், ஒன்றிய கழகத்தின் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய அனைவருக்கும் இதயத்திலிருந்து நன்றியை தெரிவித்து விடைபெறுகிறேன் என ஸ்டாலின் பேசினார்.

Categories

Tech |