Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

கவலையவிடுங்க… வீட்டில் மூட்டை பூச்சி தொல்லையா…? இதை பாலோ பண்ணுங்க….!!!!

இந்த வெயில் காலத்தில் புழுக்கமாக இருப்பதால் தூக்கம் வருவதே அரிதாக இருக்கும் நிலையில் படுக்கையில் இருக்கும் மூட்டைப்பூச்சிகள் அதைவிட தூக்கத்தை மேலும் மோசமாகிவிடும். இந்த மூட்டை பூச்சிகள் கடிப்பதால் அதிகமான அரிப்பு ஏற்பட்டு தழும்புகள் உண்டாகலாம். இதனால் குழந்தைகளை கடித்து விடுமோ என்று அம்மாக்கள் அச்சத்துடனே இருப்பார்கள். இந்த மூட்டை பூச்சிகளை வீட்டில் இருந்து விரட்ட என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். இது பொதுவாக மெத்தை மற்றும் கட்டிலில் இருக்கக்கூடும்.

சிறியதாக இருப்பதால் வீட்டில் உள்ள ஓட்டைகள்மற்றும் துளைகள் வழியாக வரலாம்.இவை இரவு நேரங்களில் நாம் மெத்தை அல்லது கட்டிலில் படுக்கும் பொழுது வழியில்லாமல் ரத்தத்தை உறிஞ்சும் .நீண்டநேரம் ரத்ததை உறிஞ்சுவதால் ஒவ்வாமை ஏற்படுத்தும். நாம் பயன்படுத்தும் ஆடைகள் முதல் படுக்கை,மிதியடி வரை என அனைத்தையுமே வெப்பப்படுத்தும் கருவி மூலம் சுத்தபடுதுவதால் அதனை ஒழிக்க முடியும். இந்த கருவிகள் கடைகளில் கிடைக்கிறது. இதை வாங்கி பயன்படுத்தலாம் . வேக்யூம் கிளீனர் பயன்படுத்துவதால் படுக்கையில் இருக்கும் பூச்சிகளை அகற்ற முடியும்.

வீட்டில் ஒவ்வொரு அங்குலத்தையும் அடி விடாமல் சுத்தம் செய்வதால் வீட்டை சுத்தப்படுத்த முடியும். ஆல்கஹால் தண்ணீர் சேர்க்காமல் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி படுக்கையறையின் அனைத்து முலைகளிலும் தெளிக்கும்போது மூட்டைபூச்சி வெளியேறிவிடும். இது கரப்பான் மற்றும் அதன் செல்களை கரைக்கக் கூடியது .பூச்சிவிரட்டி ஆகவும் பயன்படுகிறது. இது குறித்து ஆய்வுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஓட்டைகள் கட்டிலின் இருக்கும் ஓட்டை பகுதியில்தான் இவை பெரும்பாலும் தங்கும். எனவே விரிசல்கள் ஓட்டைகளை பெரும்பாலானவரை அடைத்து விடுவது நல்லது.

Categories

Tech |