Categories
அரசியல்

கவலையா இருக்கு….! இதை போய் சாதனைனு சொல்லுறீங்க ? திமுகவுக்கு பாடம் எடுத்த பாஜக …!!

சாதனை என்றால் என்ன என பாஜக சட்டமன்ற வானதி சீனிவாசன் திமுகவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழக அரசு தான் பதவியேற்ற குறைவான மாதங்களுக்குள்ளாக நாங்கள் மிகப்பெரிய சாதனையை செய்து விட்டோம் என தமிழகத்தினுடைய முதல்வரும், அமைச்சர்களும் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாளிதழ்களில் தமிழகத்தினுடைய மின்சாரப் பற்றாக்குறை என்பது அபாயகரமான அளவிற்கு வந்து விடுமோ என்கின்ற தகவல்கள் எல்லாம் வருகின்றது.

ஒருபுறம் விவசாயிகளுக்காக நீண்ட காலமாக காத்திருப்பில் இருக்கின்ற ஒரு லட்சம் மின் அழைப்புகளை கொடுப்போம் என தமிழக அரசு கூறி விட்டு, இன்னொரு இன்னொரு பக்கம் இரண்டு மூன்று நாட்கள் தான் நம்முடைய மின்சார தேவைக்காக நிலக்கரி கையிருப்பில் இருக்கிறதோ அப்படின்னு செய்தி எல்லாம் வருவது கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

ஆகவே வெள்ளை அறிக்கை என்பது தமிழக அரசினுடைய நிதிப்பற்றாக்குறையை காட்டுகின்ற அந்த அறிக்கையை தங்கள் சாதனையாக கருதி கொள்ளாமல் இதிலிருந்து எப்படி நிர்வாக சீர்திருத்தங்கள், நீதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கு என்னென்னவெல்லாம் காரியங்களை செய்ய வேண்டுமோ அதில் அரசு கவனம் கொடுக்க   வேண்டுமெனவும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

200வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டது, 4மாதங்களில் 40%வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு, சாதனை புரிந்துள்ளோம் என  முதல்வர் சொல்வதை சாதனை என்பது இதுவரை இல்லாத அளவிற்கு மக்களுடைய முன்னேற்றத்தில் கொண்டு வருவதும், அரசாங்கத்தின் திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது அப்படி இருப்பதில் தான் அந்த சாதனை இருக்க முடியுமே தவிர அறிவிப்புகளில் சாதனை வந்துவிடாது என தெரிவித்தார்.

Categories

Tech |