Categories
பல்சுவை

கவலைய விடுங்க….!வெள்ளை துணிகள் பளபளனு மின்னனுமா….? இதை செஞ்சாலே போதும்…. இதோ உங்களுக்கான டிப்ஸ்…!!!

பொதுவாக வெள்ளை துணி என்றாலே நமக்கு துவைப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கறைகளை நீக்குவது மிகவும் கடினம். ஆனால் சற்று மெனக்கட்டால் இதில் உள்ள கரைகளை நீக்கிவிடலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். மற்ற துணிகளை வெள்ளை துணியோடு சேர்த்து துவைக்கும் பொழுது அதில் உள்ள சாயங்கள் ஒட்டிக்கொண்டு விடாப்பிடியான கரையாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படியே கெமிக்கல் நிறைந்த சோப்பு மற்றும் லிக்யூடு யூஸ் பண்ணும் பொழுதும் வெண்ணை தன்மை நீண்ட காலத்திற்கு நிலைப்பதில்லை. ஆடையினுடைய வெண்மை தன்மை மங்கி பழையது போல மாறிடும். எனவே வெள்ளை நிற ஆடைகள் மற்ற ஆடைகளோடு சேர்த்து துவைப்பதை நிறுத்திவிட்டு தனியாக துவைக்கலாம்.

மற்ற ஆடைகளோடு சேர்த்து துவைப்பதால் அந்த ஆடைகளுடைய சாயமானது வெள்ளை துணியில் பட்டு ஆடைகளின் வெண்மை தன்மை பாழாகிவிடும. வெள்ளை நிறமும் மாறாமல் இருக்கும். வெள்ளை துணிகளுக்கு அதிக சோப்பை பயன்படுத்தினால் மட்டுமே அழுக்கு போகும் என்று நினைக்கிறோம். ஆனால் வெள்ளை நிற ஆடையில் அழுக்கை போக்க கொஞ்சம் சோப்பை பயன்படுத்தினாலே போதும். அதிகமான சோப்பை பயன்படுத்தும் பொழுது ஆடைகளில் திட்டுதிட்டாக படியும். எனவே வெள்ளை நிற ஆடைகளுக்கு துவைக்கும் போது குறைந்த அளவு சோப்பை மட்டுமே பயன்படுத்தலாம்.

நீல நிற லிக்கியுட் வெள்ளை நிற ஆடைகளில் சேர்க்கும் பொழுது இது வெள்ளை நிற ஆடைகளை வெண்மையாக்கக உதவுகிறது. வெள்ளை நிற ஆடையில் நீண்ட நேரம் வெயிலில் காய வைக்க கூடாது. இதற்கு குறைந்த வெப்ப மட்டுமே போதுமானது. அதிக வெப்பத்தில் காய வைக்கும் பொழுது துணிகள் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். அதேபோன்று துணிகளுக்கு பயன்படுத்தும் குளோரின் அல்லது ப்ளீச் துணிகளை சேதபடுத்த வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வெள்ளை நிற ஆடைகளை சாம்பல் மற்றும் மஞ்சள் நிறமாக மாற்றும். எனவே இதை பருத்தி துணிகளுக்கு மட்டுமே ப்ளீச் செய்ய பயன்படுத்த வேண்டும்.

மற்ற ஆடைகளுக்கு பயன்படுத்த வேண்டாம். எலுமிச்சை சாறு ஒரு ஆர்கானிக் ப்ளீச்சிங் ஏஜெண்டாக செயல்படுகிறது. எனவே வெள்ளை நிற ஆடைகளை உள்ள கறைகளை நீக்க இது பயன்படுகிறது. எலுமிச்சை சாறை மறுநாள் துணிகளில் துவைக்கும் முன் இரவில் அதை ஊற வைக்க வேண்டும். பிறகு துவைப்பதற்கு முன்பு சோப்பு அல்லது பவுடர் துணியில் சேர்த்து துவைத்தால் கரைகள் நீங்கிவிடும். பாத்திரம் கழுவும் சோப்பு திரவம் உங்கள் ஆடைகள் பிரகாசமாக வைக்க உதவும். எனவே வெள்ளை உள்ளாடைகள் குழந்தைகளின் காலுறுகளை துவைக்க தண்ணீரில் சில ஸ்பூன் பாத்திரம் கழுவும் சோப்பு திரவத்தை பயன்படுத்தலாம்.இதையெல்லாம் பயன்படுத்தும் போது வெள்ளை துணி பளபளவென ஜொலிக்கும்.

Categories

Tech |