Categories
ஆட்டோ மொபைல்

கவாசகி நிறுவனத்தின் புது மாடல் மோட்டார் சைக்கிள்…. ரூ 1,50,000 தள்ளுபடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

கவாசகி நிறுவனம் தன்னுடைய புதிய மாடல் மோட்டார் சைக்கிளுக்கு 1 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி வழங்கியுள்ளது.

கவாசகி நிறுவனம் தன்னுடைய புதிய மாடல் வெர்சிஸ் 650 மோட்டார் சைக்கிளை EICMA 2022 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் மோட்டார் சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இந்த மாடல் மோட்டார் சைக்கிளுக்கு தற்போது கவாசகி நிறுவனம் தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளுக்கு மும்பையில் உள்ள அன்சன் கவாசகி நிறுவனம் ரூபாய் 1,50,000 வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி ஏப்ரல் 30-ம் தேதி வரை மட்டுமே நீடிக்கும். இந்த வெர்சஸ் 650 மாடல் மோட்டார் சைக்கிளுக்கு 4 வருடங்கள் வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளின் அசல் விலை 9,25,000 ரூபாய் ஆகும். இந்நிலையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் 9,25,000 ரூபாயில் இருந்து 7,75,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தள்ளுபடி விலை ஏப்ரல் 30-ம் தேதி வரை மட்டுமே நீடிக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளில் TFT display, direction control, மேம்பட்ட ஸ்டைலிங், 649 சிசி, barrel to wheels engine மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மற்ற மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்றே வெர்சன் 650 மாடல் உள்ளது. மேலும் வெர்சன் 650 மோட்டார் சைக்கிளின் என்ஜின் 66 பிஹெச்பி பவர், 61 நியூட்டன் மீட்டர் dark இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

Categories

Tech |