Categories
கிரிக்கெட் விளையாட்டு

கவாஸ்கருக்கு இந்த இடத்தில் பேட்டிங் வராது… உண்மையை உடைத்த சக வீரர் கிரண்…!!

வலைப்பயிற்சியில் கவாஸ்கருக்கு பேட்டிங் சரியாக வராது என்ற ரகசியத்தை  அவருடன் விளையாடிய கிரண் மோரே கூறியுள்ளார்

10 ஆயிரம் ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் குவித்த இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கருக்கு வலைப்பயிற்சி அலர்ஜி என்ற ரகசியத்தை அவருடன் சேர்ந்து விளையாடிய கிரண் மோரே வெளிப்படுத்தியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய கிரண் மோரே, ‘‘நான் பார்த்தவரை வலை பயிற்சியில் மோசமான ஆடுபவர் கவாஸ்கர். அவருக்கு வலைப்பயிற்சியில் ஈடுபடுவது எப்பொழுதும் பிடிக்காது. அதில் மட்டும் அவர் எப்போழுதுமே தடுமாறுவார்.

நீங்கள் அவரை வலை பயிற்சியில் பார்த்து விட்டு, மறுநாள் களத்தில் அவர் பேட்டிங் செய்வதை பார்த்தால் நிச்சயமாக 99.9 சதவீதம் வித்தியாசம் காணப்படும். வலைப்பயிற்சியில் பார்க்கும்போது, இவரெல்லாம் எப்படி ரன் குவிப்பரோ என்று நினைத்தால், மறுநாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரை பார்க்கும்போது, ‘வாவ்’ எவ்வளவு பிரமாதமாக ஆடுகிறார் என்று ஆச்சரியப்பட்டு பாராட்டுவீர்கள். ஆட்டத்தின் மீது அவருடைய கவனம் நாம்  நம்ப முடியாத அளவுக்கு இருக்கும்’’ என்று மிகைப்படுத்தி கூறியுள்ளார் கிரண்.

Categories

Tech |