கவிஞர் வைரமுத்து இதயநோய் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான வைரமுத்து இன்று காலை திடீரென சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் இதய நோய் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் வைரமுத்து மருத்துவமனையில் என்பது பற்றி அவரின் உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, வைரமுத்து வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.