லிப்ட் படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கவின். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். தற்போது இவர் ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். மேலும் லிப்ட் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய இன்னா மயிலு பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இன்னா மயிலு பாடலின் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.