கவின் உடன் பிரேக்கப் ஆகிவிட்டதாக லாஸ்லியா சொன்ன தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தி வாசிப்பாளராக இருந்தார். பிக்பாஸ் வீட்டில் இவருக்கும் இன்னொரு போட்டியாளரான கவினுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் வெளியில் சுற்றி வருவதாக செய்திகள் வைரலானது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு லாஸ்லியா பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து கூகிள் குட்டப்பன் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகனாக தர்சன் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது லாஸ்லியா ஒரு பேட்டியில் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது கவினுக்கும் எனக்கும் இடையே ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு நாங்கள் பழகியதும் எங்களுக்குள் செட்டாகவில்லை. இப்போது இருவருமே அவரவர் பாதையில் பயணித்து வருகிறோம். அந்தவகையில் எங்கள் இடையிலான காதல் பிரேக் அப் ஆகி பிரிந்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.