Categories
சினிமா தமிழ் சினிமா

கவின்- ரெபா மோனிகா இணையும் வெப்சீரிஸ்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

கவின், ரெபா மோனிகா இணைந்து நடிக்கும் ஆகாஷ்வாணி வெப்சீரிஸின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் கவின். தற்போது இவர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். எக்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் கவின் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் சமீபத்தில் கவின், தேஜு அஸ்வினி இணைந்து நடித்த அஸ்குமாரோ ஆல்பம் பாடல் வெளியாகி இணையத்தில் செம வைரலானது.

உணர்வுப்பூர்வமா காதல் கதை  நட்சத்திர நடிகர்கள்  பிக்பாஸ் கவின்  ரெபா ஜான்  கவினின் புதிய இணைய தொடர்  இணைய தொடர்  வெப் சீரீஸ்  சென்னை செய்திகள்  சினிமா செய்திகள்  bigboss kavin  actor kavin news web series  kavin new update  reba john  big boss kavin and reba john new web series  new web series  ஆகாஷ் வாணி  akash vani web series update

அடுத்ததாக நடிகர் கவின் வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார். அதன்படி ஆகாஷ்வாணி என்கிற ரொமான்டிக் வெப் தொடரில் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். எனோக் ஏபிள் இயக்கும் இந்த வெப் தொடரில் ரெபா மோனிகா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சரத் ரவி, தீபக் பரமேஷ், அபிதா வெங்கட்ராமன், வின்சா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் ஆகாஷ்வாணி வெப்சீரிஸின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |