நடிகை காஜல் அகர்வால் அவரது கணவர் கவுதம் பற்றிய ரகசியங்களை பேட்டியளித்துள்ளார் .
தமிழ் திரையுலக பிரபல நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவுடன் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தன் கணவர் பற்றிய ரகசியங்களை பேட்டியளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், கவுதமுக்கு படம் பார்க்கும் பழக்கம் இல்லை. நானாக தான் அவரை உட்கார வைத்து படம் பார்க்க வைப்பேன் .
கவுதமிற்கு அவரது செல்போன் மீது காதல், அந்த காதலை கைவிட்டால் நன்றாக இருக்கும் . எங்களுக்கு இடையே சண்டை வந்தால் முதலில் விட்டுக் கொடுப்பவர் கவுதம் தான். என் மீது அதிக அக்கறை வைத்துள்ளார். நான் வெளியே சென்றால் பத்திரமாக சென்றேனா என்றும் என்னுடைய நாள் நல்லபடியாக இருந்ததா என்றும் கவுதம் கேட்பார் . திருமணத்திற்கு முன்பு கவுதம் இப்படி எல்லாம் இல்லை என அவர் கூறியுள்ளார்.