தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்கள
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1895
பணியிடங்களுக்கு மாணாக்கர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்வி சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு ஜன.,4 முதல் 12-ந் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஜன.,3-ல் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும் என்றார்.