கடவுள் சிவனின் மேல் கஷ்டங்களை எல்லாம் போட்டு விட்டு தனது கெரியரில் கவனம் செலுத்தும் தனுஷ்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் திரைக்கு வந்த புதிதில் இவர் பல விமர்சனங்களுக்கு உள்ளாகினார். இவர் பல விமர்சனங்களையும் தாண்டி தற்போது இந்த ஒரு நிலைமைக்கு வந்தது அவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை தான். தனுஷ் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் ஹாலிவுட் படங்களிலும் நடிக்கின்றார். இவர் தான் நடிக்கும் திரைப்படங்களில் படத்தின் கதாபாத்திரமாகவே மாறி விடுவார். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதைக்கருவை கொண்டதாக அமையும்.
பல வெற்றிப்படங்களை தந்த இவர் கெரியரில் வெற்றி அடைந்து இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார். இவர் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவை 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தார். குடும்ப வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினையை திசை திருப்பும் விதமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர் தனக்கு கஷ்டங்கள் அதிகமாக ஏற்படும் பொழுது சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவார். சிவனின் தீவிர பக்தர் தனுஷ். இந்நிலையில் இவர் தன் பாரத்தை எல்லாம் சிவனின் மீது போட்டு விட்டார். தனது கஷ்ட நஷ்டங்களை எல்லாம் சிவன் பார்த்துக்கொள்வார் என்று பாரத்தை அவர் மேல் போட்டுவிட்டார்.