கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பக்கத்தில் உள்ள வெள்ளமடம் பகுதியில் எஸ்பிஐ வங்கி கிளை அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வங்கியின் ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் வந்து சோதனை செய்துள்ளனர். அப்போது வங்கியின் ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் வங்கி அதிகாரிகள் பணத்தை சரி பார்த்தபோது பணம் திருட்டு போகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
வாரத்தின் கடைசி விடுமுறை நாள் என்பதன் காரணமாக வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பணம் எடுத்திருப்பதால் ஏடிஎம்மில் பணம் காலியாக உள்ளது. இதனால் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையன் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.