திருமணம் ஆகாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லங்கோடு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ராஜேஷ் (வயது 31). இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் ராஜேஷ்தான் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் தாயுடன் வசித்து வரும் ராஜேஷ் நமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று அடிக்கடி மன உளைச்சலில் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி 2 முறை தற்கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு எல்லாரும் தூங்கிய பின்பு வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ராஜேஷின் உடலைகைப்பற்றி உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.