அமாவாசை தினத்தில் 50 ரூபாய் கொடுத்தால் வாடகை காக்கைக்கு உணவு அளிக்கலாம் என்ற பிசினஸ் படுஜோராக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
முன்னொரு காலத்தில் இலவசமாகக் கிடைத்த கோமியம், வறட்டி போன்றவற்றை தற்போது காசு கொடுத்து வாங்கும் காலம் உருவாகிவிட்டது. அதுகூட பரவாயில்லை ஆனால் தற்போது காகத்திற்கு உணவளிப்பதற்கு கூட வாடகை வசூலிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் வீட்டில் இருப்பவர்கள் நம் முன்னோர்களுக்கு உணவு சமைத்து படையல் வைத்து அதனை காக்கைக்கு வைப்பார்கள். அந்த உணவை காக்கைக்கு எடுத்து கொண்டால் நம் முன்னோர்கள் அதை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். அதன்பிறகுதான் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடுவார்கள். இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நம்பிக்கையாகும்.
சாதாரண நாட்களில் காக்கைக்கு நாம் ஏதாவது உணவு கொடுத்தால் கத்தக் கூட தேவையில்லை அது வந்து சாதத்தை எடுத்துக்கொள்ளும். ஆனால் விசேஷ நாட்கள் மற்றும் அமாவாசை தினங்களில் காக்கைக்கு உணவு வைத்துவிட்டு காகா என கத்தினாலும் ஒரு காக்காய் கூட வருவதில்லை. ஏனெனில் அது பிஸியாகி விடுகிறது. இது போன்ற பிரச்சனைகள் கிராமப்புறங்களில் இருக்காது. ஏனெனில் அங்கு மரங்கள் அதிகமாக இருப்பதால் காகம் அதிகமாக காணப்படும். நகர்ப்புறங்களில் இருக்கும் மரங்களை எல்லாம் நாம் வெட்டி விட்டதால் காக்காய்க்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
வாடகை காக்கா. https://t.co/ioFQc4bIxE via @FacebookWatch
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) October 9, 2021
அதற்காக அம்மாவாசை தினத்தில் வாடகை காக்கைக்கு உணவு வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு நபர் காக்காயை அவரின் வாகனத்தில் எடுத்து வருகிறார். அந்த காக்காயை தேடி வரும் நபர்கள் 50 ரூபாய் கொடுத்துவிட்டு காக்கைக்கு உணவளிக்க நின்றனர். இனி அமாவாசை தினத்தில் கா கா என்று கத்த தேவையில்லை. இவருக்கு அழைத்தால் போதும், காக்கைக்கு நீங்கள் எளிதில் உணவு அளித்து விடலாம். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நாம் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணமாக உள்ளது.