தேர்தல் விமர்சகர் பிரசாத் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த தலைமை பொறுப்பை ஏற்க போகிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்திருப்பதும், அதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து பதிலடி கொடுத்து இருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் விமர்சகர் பிரசாந்த் கிஷோர் லக்கிம்பூர் சம்பவத்தில் காங்கிரஸின் அணுகுமுறையை குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
அதில் அவர் “இந்த சம்பவத்திற்கு பிறகு பழம்பெரும் கட்சியின் தலைமையில் தானாக உயிர் பெற்று மீண்டு வரும் என மக்கள் நினைக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் அக்கட்சியின் அமைப்பு ரீதியாகவும் ஏராளமான பிரச்சனைகள் பலவீனமாக உள்ளது” என விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு கூறியிருப்பதாவது, “பிரசாந்த் கிஷோரின் சான்றிதழ் காங்கிரஸ் கட்சிக்கு தேவை இல்லை. மேலும்அவர் ஒன்றும் அரசியல்வாதி இல்லை. எனவே அவரது சான்றிதழ் எங்களது காங்கிரஸிற்கு அவசியமற்ற ஒன்றாகும். இதனால் உத்திர பிரதேச மக்களின் ஆதரவு மட்டுமே எங்களுக்கு தேவை” என்று கூறியுள்ளார்.